கோவை மாவட்டத்தில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதால் காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர் கோவையில் ஆடிட்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விக்னேஷும், அவருடன் கல்லூரியில் படித்த மாணவி ஒருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷின் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்த விக்னேஷ், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்து விக்னேஷ், தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்து, அவரது அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.