திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஆர்ஓ எச் ஷெட் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய எஸ்சி மற்றும் எஸ்டி ரெயில்வே சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜோலார்பேட்டை கிளை நிர்வாகி எஸ் சந்திரகாசி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என்று ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
ரெயில்வே நிர்வாகம் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருவதை தவிர்த்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளரின் உரிமையை பறிக்காதே என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.