தென்காசி அருகே 7 முறை தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த குமந்தாபுரம் காளிமுத்து, 8வது முறையாக தற்கொலை ட்ராமா நடத்த அது சோகத்தில் முடிந்துள்ளளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர்அடுத்த குமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. தமிழக அரசின் மதுபான கடையின் தீவிர வாடிக்கையாளரான இவர், போதையில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
மேலும், மனைவியை பயமுறுத்துவற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதையும் சைடு ஜாப்பாகவே செய்து வந்துள்ளார். இப்படியாக 7 முறை தற்கொலைக்கு முயன்று, எமனுக்கே டிமிக்கி கொடுத்து உயிர் தப்பியுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் மதுபோதையில் தகராறு செய்த காளிமுத்து, மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து விட்டதாக குடும்பத்தாரிடம் வந்து தெரிவித்துள்ளார்.
ஆனால், குடும்பத்தார் இது வழக்கம்போல ட்ராமாவாக இருக்கும் என்று விட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், காளிமுத்து இந்த முறை நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதனையடுத்து, காளிமுத்துவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரே பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.