நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கோவிட்டின் ஆரம்பகால அறிகுறிகளைப் போல் தோன்றும் ஃபுளு காய்ச்சல் பரவி வருகிறது என்பதால் மத்திய அரசு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இருமல் சில சமயங்களில் காய்ச்சல் ஆகியவை இதன் முக்கிய அடையாளங்கள். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
மருத்துவரை ஆலோசிக்காமல் தாமாக ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்டைப்போலவே இதற்கும் கைகளை அடிக்கடிக் கழுவுவது முகக்கவசம் அணிவது, கூட்டத்தில் இருந்து விலகிஇருப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.