பாகிஸ்தான் அரசுக்கு சேரவேண்டிய பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய வந்த போலீசார் அவர் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றனர்.
பிரதமர் பதவி வகித்தபோது, அவருக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில், அவரால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இம்ரான் கான் இல்லத்தில் குவிந்த கட்சி தொண்டர்கள், போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் வீட்டிற்குள் சென்று தேடியபோது இம்ரான் கான் அங்கில்லாததால், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.