முதல்வரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கரூர்: தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  04.03.2023 அன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடவு செய்யும் வைத்தார்கள். பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை துவக்கி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமை வகித்தார்.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முனைவர் அதுல்யா மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி செயல் இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பா.பிரியங்காபங்கஜம் , மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின்  70 வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் கிராமத்தில் அனாதீனம் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் 1 இலட்சம் மரக்கன்றுகளும், பண்ணப்பட்டி கிராமத்தில் கல்லாங்குத்து நிலத்தில் 9.11 ஏக்கர் பரப்பளவில் 1 இலட்சம் மரக்கன்றுகளும், இனுங்கூர் கிராமத்தில் வேளாண்மை துறை பாதுகாப்பில் உள்ள நிலத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் 3 இலட்சம் மரக்கன்றுகளும், கன்னிமவளத்துறை சார்பில் 2 இலட்சம் மரக்கன்றுகளும், கரூர் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் 25 ஆயிரம் பல மரக்கன்றுகளும், புகலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1300 மரக்கன்றுகளும், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1800 மரக்கன்றுகளும், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1300 மரக்கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் 50,650 மரக்கன்றுகளும், பேரூராட்சிகள் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் 6700 மரக்கன்றுகளும், சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் 500 மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 157 பஞ்சாயத்துகளில் 4 இலட்சம் மரக்கன்றுகளும் ஆக மொத்தம் கரூர் மாவட்டம் முழுவதும் வனப் பகுதியினை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடவு செய்யும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்து காணொளி வாயிலாக பிற இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளை பார்வையிட்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம் (குளித்தலை), மேயர் வெ.கவிதா, ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி துணை மேயர் பா. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு) திட்ட இயக்குநர்கள் வாணி ஈஸ்வரி (ஊரக வளர்ச்சி), சீனிவாசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.