தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வட மாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் துறை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, வெளி மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து வதந்திகள் மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையை பரப்புவதற்காக முயற்சியாகும். வதந்திகளை பரப்புவது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும் வட இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதற்கு முயற்சியாகும்.
மேலும் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார் அதானி பிரச்சினையை திசை திருப்பவே அண்ணாமலை இது முயற்சி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.