கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொது குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னர், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9 ஆம் தேதி நடக்க உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த போதிலும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிகவினர் ஒருங்கிணைத்து இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, கேசி பழனிச்சாமி, ஆளும் திமுக, கொடைச்சல் கொடுக்கும் பாஜக என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த போதிலும் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் நிற்பது அதிசியம் என்று அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வரும் மார்ச் 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று, ஆட்ச்சியின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்களுடன் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் வரும் 10ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வெளியான தகவலின்படி, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடக்க உள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி போட்டியின்றி தேர்வு செய்வது குறித்து கழக நிர்வாகிகள் இடம் ஆலோசனை நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.