ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கு ஜகார்தாவில் மக்கள் அதிகம் வசிக்கும் தனா மெரா என்ற பகுதிக்கு அருகே, அரசின் பெர்டெமினா என்ற எரிபொருள் கிடங்கு உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் எரிபொருள் கிடங்கு எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் 260,பேர், 53 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ நேற்று காலை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தோனேஷிய அரசு உதவும் என அவர் உறுதியளித்தார். எரிபொருள் கிடங்குக்கு அருகேயுள்ள மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும்படி பெட்ரோலிய அமைச்சர் மற்றும் ஜகார்தா ஆளுநருக்கு அதிபர் விடோடோ உத்தரவு பிறப்பித்தார்.
எரிபொருள் கிடங்கில் நடத்தப்பட்ட ஆய்வில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.