எகிப்தின் கிசா பிரமிட் ரகசிய அறையின் படம் வெளியீடு

கைரோ:எகிப்தில் அமைந்துள்ள பிரபல பிரமிடான கிசாவில் ரகசிய அறை இருப்பதற்கான காணொளியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பண்டை காலத்து எகிப்தியர்களிடம் இறந்தவர்கள் உயிருடன் வருவார்கள் என்ற தீவிர நம்பிக்கை இருந்தது. இதனால், இறந்தவர்களின் உடலின் முக்கிய பாகங்களை குடுவையில் அடைத்து அவர்களது உடலை வாசனை திரவியத்தால் பதப்படுத்தி பிரமிடுகளில் புதைக்கும் பழக்கம் இருந்தது. இதனாலேயே பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் எகிப்தின் பிரமாண்ட பிரமிடான கிசா கிரேட் பிரமிடு குறித்த ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிசா கிரேட் பிரமிடின் முதன்மை நுழைவாயிலுக்கு மேலே ஒரு மூடப்பட்ட ரகசிய அறை போன்ற பகுதி இருப்பது தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், அதன் காணொலியை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

என்டோஸ்கோபி முறையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. 30 அடி நீளமும், 7 அடி அகலமும் இருக்கிறது அந்த ரகசிய அறை. பிரமிடின் எடையை சரிசமமாக தாங்குவதற்கு இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “நாங்கள் எங்கள் எங்களது ஆராய்ச்சியை தொடரப் போகிறோம், இந்த அறைக்கும் கீழேவும், அதன் முடிவிலும் என்ன உள்ளது என்பதை கண்டறிவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.