விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுமாப்பிள்ளையை மாற்றுத்திறனாளி வாலிபர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மணிகண்டன் நேற்று அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்துராஜுடன்(38) மது அருந்தியுள்ளார்.
அப்பொழுது மணிகண்டன், முத்துராஜீன் உடல் ஊனம் குறித்து கேலி செய்துள்ளார். இதனை முத்துராஜ் கண்டித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து மணிகண்டன் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த முத்துராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் கழுத்தின் சரமாறியாக குத்தியுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முத்துராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.