மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை அனிகா விக்ரமன், தன்னுடைய முன்னாள் காதலன் அனூப் பிள்ளை கடுமையாக துன்புறுத்தலுக்கு செய்ததாக தெரிவித்துள்ளார். அவர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக காயப்படுத்தியதாகவும், இப்போது அவரை விட்டு முழுமையாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலனால் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களையும் அனிகா விக்ரமன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியிருக்கும் பதிவில், நான் அனூப் பிள்ளை என்பவரை காதலித்தேன். அவர் என்னை மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தினார். என் வாழ்நாளில் இப்படியொருவரை நான் பார்த்ததே இல்லை. என்னை அடித்துவிட்டு மிரட்டுவார். இப்படி நடந்து கொள்வார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. முதல் முறையாக சென்னையில் தான் அவர் என்னை தாக்கினார். இரண்டாவது முறையாக பெங்களூருவில் இருக்கும்போது தாக்கினார். இதனால் போலீஸில் புகார் அளித்தேன். முதன்முறையாக தாக்கியபோது என் காலில் விழுந்து கதறி அழுதார். என்னை மன்னித்துவிடு என்ற கெஞ்சினார். இவரை நம்பி நான் ஏமாந்துவிட்டேன். சில ஆண்டுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறேன்.
அனூப் பிள்ளையை விட்டு விலக முடிவு செய்துவிட்டேன்எ. ஆனால் அவர் என்னை விடாமல் துரத்துகிறார். நான் ஷூட்டிங் போவதில் அவருக்கு விருப்பமில்லை. நான் ஷூட்டிங் போகாமல் இருக்க ஸ்மார்ட்போனை உடைத்த சம்பவங்களும் இருக்கிறது. எனக்கு தெரியாமல், எனது ஸ்மார்ட்போன் கால்களையும், வாஸ்ட் அப் உரையாடல்களையும் கண்காணித்தார். பெங்களூருவில் என்னை தாக்கினார். எனது முகத்தை காயப்படுத்தினார். இந்த முகத்தை வைத்து எப்படி நடிப்பாய் என்று பார்க்கிறேன்? என்று ஏளனம் செய்தார்.
நான் கண்ணாடியைப் பார்த்து அழும்போது கூட, “உன் நாடகம் நன்றாக இருக்கிறது” என்று மன உளைச்சல் அடையும்படி பேசினார். இப்போது அவரை விட்டு முழுமையாக விலகிவிட்டேன். தைரியமாக அவர் மீது புகார் அளித்துள்ளேன். ஆனால் அனூப் பிள்ளை திரைமறைவில் இருந்து எனக்கு மிரட்டல் விடுக்கிறார். அவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் இப்போது இருக்கிறார் என உருக்கமாக எழுதியுள்ளார்.