புதுடில்லி: முதன் முறையாக பெண் ராணுவ வீராங்கனை ஷிவா சவுகான் என்பவர் சியாச்சின் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
உலகின் மிக உயரமான போர்க்களமாக சியாச்சின் பனி சிகரம் கருதப்படுகிறது. இங்கு, ஆண்டு முழுவதும், ‘மைனஸ் டிகிரி’யில், கடும் குளிர் வாட்டி வதைக்கும். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, அவ்வளவு எளிதான காரியமல்ல.
இந்நிலையில் இங்கு ஷிவா சவுகான் என்ற பெண் வீராங்கனை ராணுவ கேப்டனாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். முதன்முதலாக இப்பகுதியில் பெண் வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ஷிவா சவுகான் கூறுகையில், புதிய அனுபவம் ஏற்பட்டுள்ளது. என் போன்று மேலும் பெண்கள் ராணுவத்தில் பணியாற்ற ஊக்கவிக்கப்பட வேண்டும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement