வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

வடமாநிலத்தவர்கள் ஊருக்கு கிளம்புவதன் எதிரொலியால் ஒசூர் பகுதிகளில் மலர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் தொழிற்சாலைகள், விவசாயம்,கூலி என பல்வேறு வேலைகளில் அதிகமான வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  தற்போது வதந்தி காரணமாக ஒசூர் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள் அச்சத்தில் அவர்களும் கிளம்ப தொடங்கியிருப்பதால்  ஒசூர் பகுதியில் 90% வடமாநில தொழிலாளர்களை நம்பி ரோஜா,கார்னேசன்,கிரசாந்தம், ஜிப்சோ,ஜர்பரா போன்ற மலர் வகைகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பசுமை குடில்கள் மூலம் உற்ப்பதி செய்யப்பட்டு வருகிறது.  

hosur

இந்நிலையில் ஊர்களுக்கு படையெடுத்ததால் மலர்களை அறுவடை செய்ய முடியாமலும், செடிகளுக்கு நீர் பாய்ச்சக்கூட ஆள் இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  இதனால் மலர்கள் செடியிலேயே நாசமாவதுடன் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.