VA Durai, Bala: பிதாமகன் தயாரிப்பாளருக்கு இந்த நிலையா? மருந்து வாங்கக்கூட காசில்லாமல் கதறல்..

தமிழ் சினிமாவில் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் விஏ துரை.

ரஜினிகாந்தின் பாபா படத்தையும் விஏ துரைதான் தயாரித்திருந்தார். ரஜினிகாந்துடன் நல்ல நட்பை கொண்டிருந்தார் விஏ துரை. எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தையும் நடத்தியவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை.

Varalaxmi: டிவி சேனல் தலைவர் வீட்டிற்கே வந்து ஹோட்டலுக்கு அழைத்தார்… மீண்டும் பகீர் கிளப்பிய வரலட்சுமி!

விஏ துரை தயாரித்த விஜயகாந்தின் கஜேந்திரா திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார் விஏ துரை. இதனால் இவருடைய குடும்ப வாழ்க்கையும் தோல்வியை சந்தித்தது. விஏ துரையின் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து சென்றனர். இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக தனியாகதான் வசித்து வருகிறார் விஏதுரை.

இவரது தயாரிப்பில் பாலா இயக்கிய படம்தான் பிதாமகன். 2003ஆம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளையும் குவித்தது.

Amitabh Bachchan: அச்சச்சோ… விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சன்… விலா எலும்பு உடைந்து பலத்த காயம்!

இந்நிலையில் விஏ துரை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதில் தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் காலில் எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த புண்ணால் கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் இருப்பதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார் விஏ துரை.

தன்னை கவனித்துக் கொள்ள ஆளில்லாத நிலைமையில் இருப்பதாகவும் மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ள விஏ துரை யாராவதுஉதவி செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஏ துரையின் இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Megha Gupta: கிரணுக்கு டஃப் கொடுக்கும் டிவி நடிகை… உச்சக்கட்ட கவர்ச்சியால் முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!

இதனிடையே பிதாமகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலா இயக்கத்தில் மேலும் ஒரு படத்தை தயாரிக்க விரும்பிய விஏ துரை இதுதொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் பேசியுள்ளார். அப்போது படம் பண்ண ஒப்புக்கொண்ட இயக்குநர் பாலா, விஏ துரையிடம் இருந்து முன்பணமாக 25 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

Dhanush, Suriya: தனுஷ் கூட நடிக்கக் கூடாது… ஜோதிகாவுக்கு ஆர்டர் போட்ட சூர்யா!

ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் படத்திற்கான வேலையையும் தொடங்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதற்காக பாலாவின் அலுவலகம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டார் தயாரிப்பாளர் விஏ துரை. இருப்பினும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. தற்போது மருத்துவ செலவுக்கு கூட காசில்லாமல் கஷ்டப்படும் நிலையில் விஏ துரைக்கு பாலா உதவ முன்வர வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.