ஈரானில் 5000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக புகார்| 5000 girl children were allegedly poisoned in Iran

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

துபாய், ”ஈரானில், கடந்த நவம்பர் முதல் 5000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவியர் பலர் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மாணவியரின் உடலில் விஷம் இருந்தது தெரிந்தது.

latest tamil news

ஈரானில் உள்ள 30 மாகாணங்களில், 21 மாகாணங்களில் பள்ளி மாணவியருக்கு விஷம் வைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் சமீபத்தில் உறுதி செய்தனர். மாணவியர் பள்ளிக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த சதிச் செயல் நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது.இந்நிலையில் வெளியான தகவலில், கடந்த நவ., மாதம் முதல், 5000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து ஈரானின் தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி ‘பள்ளி மாணவியருக்கு விஷம் வைக்கப்பட்டது உண்மை என தெரியவந்தால் நிச்சயம் மரண தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.