எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு… கொதிக்கும் பாஜகவினர்..!

பா.ஜ.கவிலிருந்து விலகிவரும் நிர்வாகிகளை அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தூத்துக்குடியில் பா.ஜ.க. இளைஞர் அணியினர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன

தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்து வந்த சிடிஆர் நிர்மல்குமார் கட்சியில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜகவின் மாநில செயலாளர் திலிப் கண்ணனும், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் அதிமுகவில் இணைந்ததது தமிழக பாஜகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதற்கு மத்தியில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, நான் இங்கு தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை.. ஜெயலலிதா, கலைஞரை போன்று நானும் ஒரு தலைவன்.. தலைவன் எடுக்கிற முடிவுகளால் சிலர் கோபித்துக்கொண்டு வெளியில் போகத்தான் செய்வார்கள்… அதற்காக நான் பாஜக மேனேஜரை போன்று செயல்படக்கூடாது.

”கட்சியை விட்டு நான்கு பேர் சென்றுவிட்டால் எனது வேகம் குறைந்துவிட போவதில்லை… இனிமேல்தான் வேகம் அதிகரிக்கும்… என்னை திட்டிவிட்டு போறவர்கள் பொது சேவையையோ அல்லது விவசாயமோ செய்தால் பரவாயில்லை… அவர்களும் வேறொரு கட்சியில் சேர போறாங்க.. அங்க சென்று இன்னொரு தலைவரை வாழ்க என்று கோஷமிடுவார்கள்” என்று கூறினார். மேலும், பாஜக நிர்வாகிகளை வேட்டையாடுவதாக கூட்டணி கட்சியான அதிமுகவை கடுமையாக சாடினார்.

”தமிழகத்தில் பாஜக வந்துள்ளதை இது காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமியை போல அதிமுக புள்ளிகளை நான் வேட்டையாட முடிவு செய்தால் என்னுடைய லிஸ்ட் பெரியதாக இருக்கும். அதற்கான, நேரத்தையும் இடத்தையும் நான் முடிவு செய்வேன்” என்று அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துக்கொண்டு கூட்ட தர்மத்தை மீறியதாக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே பாஜக இளைஞர் அணி சார்பில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.