கனடாவில் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் 2 வருட வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று IRCC தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசா to வேலை விசா
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவால் பகிரப்பட்ட புதிய விலக்குகளின் அடிப்படையில், கனடாவில் சுற்றுலா விசா வைத்து இருப்பவர்கள் அல்லது சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் வருபவர்கள் தங்களின் வருகையின் போது வேலை வாய்ப்புகளை கண்டறிந்தால் 2 ஆண்டுகள் வரை வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என IRCC தெரிவித்துள்ளது.
கனேடிய அரசாங்கம் பிப்ரவரி 2023ன் இறுதியில் இந்த கொள்கையை நீக்க தயாராகி வருகிறது, இருப்பினும் அவர்கள் இதை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளனர்.
Foreign nationals who are in Canada as visitors and who receive a valid job offer will continue to be able to apply for, and receive, a work permit without having to leave the country until February 28th, 2025.
Learn more: https://t.co/zRCjdQIeK5 pic.twitter.com/6NczV7yScF
— IRCC (@CitImmCanada) February 28, 2023
IRCC இந்தக் கொள்கையின் கீழ் விண்ணப்பித்து, கடந்த 12 மாதங்களுக்குள் பணி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் சுற்றுலா பார்வையாளர்கள், இப்போது இடைக்கால வேலை அங்கீகாரத்தைக் கோர முடியும், இதனால் அவர்கள் விரைவில் தங்கள் புதிய முதலாளியுடன் சேர முடியும்.
கனடாவில் தொழிலாளர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த திட்டம் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முந்தைய நடைமுறை
தற்போதைய கொள்கை மாற்றத்திற்கு முன்பாக, கனடாவில் வேலை வாய்ப்புகளை தேடும் வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு வேலை அனுமதிக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
Canada Work Visa – IRCC
வேலை விசாவிற்காக விண்ணப்பிக்கும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே நாட்டிற்குள் சுற்றுலா பார்வையாளராக இருந்தால், அவர் நாட்டை விட்டு வெளியேறி அவர்களது பணி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக மீண்டும் நுழைய வேண்டும்.
இந்நிலையில் இந்த புதிய கொள்கையின் மூலம், சுற்றுலா பார்வையாளர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை.
வேலை விசாவிற்கு யார் தகுதியுடையவர்கள்
வேலை விசாவிற்காக விண்ணப்பித்த நாளில் கனடாவில் சுற்றுலா பார்வையாளராக விசா அந்தஸ்து வைத்து இருப்பவர்கள்.
தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு (LMIA) அல்லது விலக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு மூலம் ஆதரிக்கப்படும் வேலை வாய்ப்பு உள்ள விண்ணப்பதாரர்கள்.
பிற அனைத்து தரமான சேர்க்கை அளவுகோல்களையும் பூர்த்தி செய்பவர்கள்.