நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. ஐ.என்.எஸ். விசாகபட்டினம் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை சோதனை நடத்தியதன் மூலம், கப்பல் எதிர்ப்பு ஏவுகணையாக பயன்படுத்தும் வகையில் அதன் திறன் உறுதிப்படுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ. அமைப்புடன், இணைந்து மத்திய அரசின் பாரத் டையனமிக்ஸ் நிறுவனம் அந்த ஏவுகணையை தயாரித்துள்ளது.