விருதுநகர்: விருதுநகர் அருகே கோட்டநத்தத்தில் ரமேஷ் (45) என்பவருக்கு சொந்தமான பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்று முன்தினம் இந்த ஆலையில் சேடபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (42) , கட்டனூரை சேர்ந்த கருப்பசாமி (60) ஆகிய இருவரும் கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென வெடி மருந்துகளில் தீப்பற்றியதில், 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் நேற்று அதிகாலை உயிரிழந்தனர்.
