பாஜகவின் மாநில பொறுப்பில் சவுக்கு சங்கர்..? அண்ணாமலை முடிவு ..?

தமிழக பாஜகவில் இருந்து மாநில மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், பாஜகவின் மாநில செயலாளர் திலிப் கண்ணன் ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் அடுத்தடுத்து இணைந்து அண்ணாமலைக்கு பேரிடியை இறக்கியுள்ளனர்.

டெல்லி மேலிடம் வரை இச்சம்பவம் சென்றுள்ளதால் இதுகுறித்து ஆலோசிக்க பாஜகவின் முக்கிய தலைவர் சென்னைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கட்சியை விட்டு சென்றவர்களால் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப கட்சிக்குள் போட்டி நிலவி வருகிறது. ஆனால், விசுவாசமான ஆட்களின் பட்டியலை அண்ணாமலை தயாரித்து வருகிறாராம்.

மேலும், தன் மீது அதிருப்தியில் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு கட்சியில் இருந்து விலகுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இந்த நிலையில் காலியாக உள்ள ஐடி விங் பதவிக்கு சவுக்கு சங்கரை அண்ணாமலை தேர்வு செய்திருப்பதாக ஒரு அறிக்கை வெளியாகி பகீர் கிளப்பியது. மேலும், அந்த அறிக்கையை சவுக்கு சங்கரே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பது, தமிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைமையின் அன்பு வேண்டுகோள். கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாஜகதான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது, எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது, அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். எனது தலைமையை வெறுத்து, கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாரளமாக வெளியேறிக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே வெளியேறியவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க. பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்குப் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவேண்டிய நிர்பந்தத்தில் கட்சி உள்ளது. அதனடிப்படையில் தமிழக பாஜக ஐடி விங்

தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் (வாய்ஸ் ஆப் சவுக்கு) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தலைமை தெரிவித்துக்கொள்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது திமுக ஐடி விங் மூலம் பகிரப்படும் போலி அறிக்கை என்று சவுக்கு சங்கர் கூறுகிறார். மேலும், அந்த ட்வீட்டில் திமுங்க ஐடி விங்கிற்கு நக்கலாக நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.