வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
என் தம்பி சகலகலா வித்தகன். அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? அவனுக்கு தெரியாதா வேலையே இல்லை எலக்ட்ரிகல் பிளம்பிங் கிச்சன் அப்ளையன்ஸ் எது சரியாக இல்லை என்றாலும் அது எத்தனை வருடங்கள் சர்வீஸ் போட்டிருந்தாலும் சரி, எப்படியோ சரி செய்துவிடுவான்.
ரிட்டயர் ஆன பின் கார் மெக்கானிக்கும் அவன் தான். காலையில் எழுந்து டூல் கிட்டுடன்தான் வெளியே வருவான். எப்படியோ வீட்டையே தொழிற்சாலை ஆக்கி ஏதோ ஒரு ரிப்பேர் வேலை நடந்து கொண்டே இருக்கும்.
வீட்டினுள் இருக்கும் ஏணியில் ஏறுவான் இறங்குவான், விடுவிடு என்று கிச்சனில் நுழைந்து எதையோ தேடுவான், குழாயில் இருக்கும் ரப்பரை பொருத்தி சரி செய்வான். தோசைக்கல் மற்றும் கத்திரிக்கோல் இவற்றை மாட்ட பெரிய ஸ்குரூ மாட்டி விடுவான். எதுவும் புதிதாக வாங்குவது இல்லை எல்லாம் 15-20 வருடங்கள் சர்வீஸ் போட்டோவை தான்.

அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில்தான் என் வீடு, எங்கள் வீட்டிலும் அந்த மதிநுட்ப மந்திரியின் கைவண்ணம் தான், எந்த நேரமும் டொக் டொக் சத்தம் தான்.
ஒரு நாள் காலை 10 மணிக்கு அவர்கள் வீட்டிற்கு போனேன். என் தம்பியை காணவில்லை எங்கே என்று தம்பி மனைவியிடம் கேட்டேன். அங்கே பாருங்கள் அக்கா கூடத்தின் நடுவில் என்றாள், அங்கே நடுவில் ஒரு மைக்ரோவேவ் ஐ விரித்துப் போட்டுக் கொண்டு ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தான். நடுவில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.
என்னடா தம்பி – என்றேன்.
பேசாதே அக்கா, முக்கியமான வேலையில் இருக்கிறேன் என்றான்.
தம்பி மனைவிதான் விவரம் சொன்னாள்.
‘அனைத்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கிச்சன் அப்ளையன்ஸ் கடைகளுக்கு போன் பண்ணி அந்த மைக்ரோவேவ் உதிரி பாகங்கள் கிடைக்குமா என்று வலைவீசி தேடிக் கொண்டு இருக்கிறார். அது பழைய மாடல் அது வாங்கி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது எங்கும் வருவதில்லை என்று கூறுகிறார்கள். உதிரி பாகங்கள் கிடைத்தால் தானே ரிப்பேர் செய்து விடலாம் என்று பார்க்கிறார். போட்டது போட்டபடி இருக்கு எப்பொழுது வீடு சரியாகும் என்று தெரியவில்லை’ என்று அலுத்துக் கொண்டாள்.

அடுத்த இரண்டு மூன்று நாட்கள், தான் க்ளைமாக்ஸ்.
மனைவியுடன் முகத்தில் மாஸ்குடன், ஒரு கடை விடாமல் எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி தேடி ஆகிவிட்டது எங்கும் இல்லை. முழங்கால் வலியுடன் பேண்டேஜ் கட்டிக்கொண்டு தம்பி மனைவி எழுந்திருக்கவே இல்லை. அமெரிக்கா லண்டன் என்று தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து கேட்டு பார்த்துவிட்டான் ஒன்றும் பயனில்லை. கடைசியில் மனமே இல்லாமல் வாசலில் வந்த பழைய சாமான் வாங்க வந்தவனிடம் போட்டுவிட்டான்.
கூடத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த மைக்ரோவேவ் எங்கே என்று யார் கேட்டாலும், அதை உபயோகிப்பது நல்லதில்லை என்று சொல்கிறார்களே அதனால் பழைய சாமான் கடைக்கு போட்டுவிட்டேன் – என்கிறான்.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.