ரஷ்யா ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து 307 குழந்தைகளை மீட்ட உக்ரைன்!


ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து 307 குழந்தைகளை உக்ரைன் மீட்டுள்ளது.

307 குழந்தைகள் மீட்பு

உக்ரைனில் போர் தொடங்கி ஒரு வருடமாகிறது. அப்போதிலிருந்து 16,000-க்கும் அதிகமான உக்ரேனிய குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், ரஷ்யா தானாக முன்வந்து உக்ரைனிலிருந்து மக்களை வெளியேற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து உக்ரைன் 307 குழந்தைகளை வெளியே கொண்டு வந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான உக்ரேனிய நாடாளுமன்ற ஆணையர் தெரிவித்தார். இதில், கடந்த வாரம் தனது பட்டியுடன் இணைந்த 8 வயது சிறுவனும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து 307 குழந்தைகளை மீட்ட உக்ரைன்! | Ukraine Brought Back 307 Children Russia OccupiedReuters

8 வயது சிறுவன்

“பிப்ரவரி மாத இறுதியில், மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் ரஷ்யாவால் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கும் ஒரு குழந்தையை மீட்டெடுக்க உதவும் கோரிக்கையைப் பெற்றது,” என்று மனித உரிமைகளுக்கான உக்ரேனிய நாடாளுமன்ற ஆணையர் Dmytro Lubinets தெரிவித்தார்.

சில நாட்களுக்குள், ஆணையர் அலுவலக ஊழியர்களின் உதவியுடன், சாஷ்கோ (Sashko) எனும் 8 வயது சிறுவன் தனது பாட்டியுடன் இணைக்கப்பட்டதாக, ஆணையர் தெரிவித்தார்.

356 பேர் காணவில்லை

உக்ரைன் வக்கீல் ஜெனரல் அலுவலகத்தின்படி, போரில் இதுவரை 464 குழந்தைகள் இறந்துள்ளனர். போர் இப்போது 13-வது மாதத்தில் முடிவில்லாமல் நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் 356 பேர் இன்னும் காணவில்லை என்று உக்ரேனிய காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

இத்தனிடையே, உக்ரேனிய பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பதை மாஸ்கோ மறுத்துள்ளது, மேலும் உக்ரேனியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்குள் நகர்த்தியதாக முன்வைக்கப்பட்ட முந்தைய கூற்றுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.