வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து இந்த விஷயம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதை பற்றி விசாரணை செய்ய பீகார் அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்தது. பீகார் அதிகாரிகள் கோயம்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்திவிட்டு தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியாளர்கள் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பின், “வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கூறினார்கள். சமூக வலைதளங்களில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியான போலி வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம். அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.” என்று தெரிவித்து இருந்தார்கள்.
இத்தகைய நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திற்கு விரைந்த பீகார் மாநில அதிகாரிகள் குழு தலைமைச் செயலாளருடன், இப்பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.