Lal Salaam: இன்று துவங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் ஷூட்டிங்: திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் வளரட்டும் என்பதற்காக கெரியரில் இருந்து பிரேக் எடுத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மகன்கள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டார். 8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா இயக்கும் படம் லால் சலாம்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். படத்தின் பூஜையில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் படப்பிடிப்பை இன்று துவங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சரி ஐஸ்வர்யா தன் படப்பிடிப்பை துவங்கியிருப்பதை பார்த்து அஜித் குமார் ரசிகர்கள் ஏன் கோபப்பட்டு திட்ட வேண்டும் என்று கேட்கிறீர்களா?

அஜித் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது எந்த கோபமும் இல்லை. அவர்களின் கோபம் எல்லாம் லைகா நிறுவனம் மீது தான். லால் சலாம் படப்பிடிப்பு துவங்கிவிட்டது, ஹேப்பி ஹோலி என லைகா நிறுவனம் போட்ட ட்வீட்டை பார்த்து தான் அஜித் ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. விக்னேஷ் சிவனை நீக்கிய பிறகு ஏ.கே. 62 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் லால் சலாம் அப்டேட்டை பார்த்த அஜித் ரசிகர்களோ, ஏ.கே. 62 அப்டேட் மட்டும் கொடுக்க மாட்டீங்க. எங்களை இப்படி கஷ்டப்படுத்துவதே வேலையாப் போச்சு. அஜித் பட அப்டேட் எங்கய்யா என கடுப்பாக கேட்டிருக்கிறார்கள்.

அவ்வளவு தான். மற்றபடி ஐஸ்வர்யா மீதோ, லால் சலாம் மீதோ அஜித் ரசிகர்களுக்கு எந்த கடுப்பும் இல்லை.

லால் சலாம் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அந்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். அவர் இதுவரை ரஜினியுடன் சேர்ந்து நடித்ததே இல்லை.

இந்நிலையில் லால் சலாம் படம் மூலம் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கப் போவதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் ஜீவிதா. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. அந்த பட வேலையை முடித்துவிட்டு லால் சலாம் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம். தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதல்முறையாக நடிக்கிறார் ரஜினிகாந்த்.

AK62, Ajith: அஜித்துக்கு வில்லனாகும் பாக்ஸர் நடிகர்: அடடே, அவங்க ஏற்கனவே சேர்ந்து நடிச்சிருக்காங்களே

கணவர் தனுஷை அடுத்து அப்பாவை இயக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய வேகத்தில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.