Pattiyal Sekar: தயாரிப்பாளர் பட்டியல் சேகர் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விளங்கியவர் பட்டியல் சேகர். இவரது மகன்கள் விஷ்ணுவர்தன் இயக்குனரகாவும், கிருஷ்ணா நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 63 வயதான பட்டியல் சேகர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ படத்தை தயாரித்தவர் சேகர். இந்தப்படத்தை தயாரித்ததால் இவர் பட்டியல் சேகர் என அழைக்கப்பட்டு வந்தார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணாவின் தந்தையாவார். ‘பட்டியல்’ படம் தவிர கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கழுகு’ மற்றும் அலிபாபா படங்களை தயாரித்துள்ளார் சேகர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் இவர் வீரா நடித்த ‘ராஜதந்திரம்’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். பட்டியல் சேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பட்டியல் சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Vanangaan: சூர்யாவை தொடர்ந்து ஹீரோயினையும் மாற்றிய பாலா: வேகமெடுக்கும் ‘வணங்கான்’.!

பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

AK 62: அஜித்துடன் மோத போகும் பிரபல நடிகர்: ‘ஏகே 62’ படத்திற்கு கிடைத்த தரமான வில்லன்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.