உலகின் முன்னணி விமானப்படைகளில் ஒன்றாக இருக்கும் இந்திய விமானப் படையின் போர் பிரிவில் இதுவரை எந்தவொரு பெண்ணும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதில்லை. அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் விதமாக முதன்முறையாக இந்திய விமானப் படையின் போர் பிரிவில் தலைமைப் பொறுப்பில் ஷாலிசா தாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்திய விமானப் படையில் விங் கமாண்டர் பொறுப்பில் இருக்கிறார் அவர். உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஷாலிஷா தாமி நியமனம் அமைந்துள்ளது.
அவர் மேற்கத்திய செக்டாரில் முன்னணி போர் பிரிவின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர். இந்த மாத தொடக்கத்தில், ராணுவம் மருத்துவப் பிரிவுக்கு வெளியே முதல் முறையாக பெண் அதிகாரிகளை கட்டளைப் பணிகளுக்கு நியமிக்கத் தொடங்கியது. அவர்களில் சுமார் 50 பேர் செயல்பாட்டு பகுதிகளில் பிரிவுகளுக்கு தலைமை தாங்குவார்கள். இது வடக்கு மற்றும் கிழக்கு கட்டளை பகுதிகளில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.
குரூப் கேப்டன் தாமி -ஐ பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். 2,800 மணி நேரம் போர் படை விமானத்தில் பறந்த அனுபவம் பெற்றவர். ஒரு தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர். இதுமட்டுமல்லாமல் இன்னும் பல தகுதிகளை கொண்டிருக்கும் அவருக்கு, இத்தகைய உயரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. IAF-ல் ஒரு குழு கேப்டன், இராணுவத்தில் ஒரு கர்னலுக்கு சமமானவர். இரண்டு முறை விமான படை தலைமைத் தளபதியால் பாராட்டப்பட்ட ஷாலிசா தாமி, தற்போது ஒரு முன்னணி விமான கட்டளைத் தலைமையகத்தின் செயல்பாட்டுக் கிளையில் நியமிக்கப்பட்டுள்ளார்.