அன்பு என்ற படத்தை நாம் மறந்திருந்தாலும் அதில் இடம்பெற்ற தவமின்றி கிடைத்த வரமே என்ற பாடலை யாராலும் மறந்திருக்க முடியாது. அப்படத்தில் ஹீரோவாக நடித்த பாலா தான் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வரும் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த பாலா அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தார். பின்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்த தம்பி படத்திலும் நடித்தார் பாலா. இதைத்தொடர்ந்து கேரளாவில் தன் குடும்பத்துடன் செட்டிலான பாலா மலையாளத்தில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
Jayam ravi: லோகேஷ் மட்டும் அல்ல..நானும் தான்..உறுதிப்படுத்திய ஜெயம் ரவி..!
இந்நிலையில் திடீரென பாலாவிற்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக சிறுத்தை சிவா சூர்யா 42 படப்பிடிப்பு முடிந்த பிறகு அடிக்கடி தன் தம்பியை பார்க்க கேரளாவிற்கு சென்று வந்தார்.
வாத்தி படம் என்னை வியக்க வைக்கிறது – பாரதிராஜா
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் நடிகர் பாலாவிற்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருடன் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்ள நிலையில் சிறுத்தை சிவா தற்போது தன் தம்பியுடன் இருப்பதற்காக சூர்யா 42 படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கேரளாவிற்கு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் பாலா
இந்நிலையில் பாலா கடந்த 2016 ஆம் ஆண்டு தன் முதல் மனைவியான பாடகி அம்ருதாவை விவாகரத்து செய்தார். பின்பு கடந்த 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கேரளாவில் வசித்து வருகின்றார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து மூன்று பேர் கொண்ட கும்பல் தன் மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தார் பாலா.
சோகத்தில் சிறுத்தை சிவா
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டை விட்டு கேரளாவில் செட்டிலான பாலா மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவர்கள் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.