ஈரோடு தாளவாடியில் ஆண்கள் மட்டும் பங்கேற்க்கும் கோயில் திருவிழாவில் 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் அமைந்துள்ளது மல்லிகார்ஜுன சாமி கோயில். இதில், குண்டம் திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்தது. சத்தியமங்கலம் அருகே இருக்கும் தாளவாடி மலை பகுதியில் கொங்கு அள்ளி காட்டுப்பகுதியில் 3 மலைகளுக்கு நடுவில் பாறை குகையில் இந்த மல்லிகார்ஜுன சாமி கோவில் இருக்கின்றது.
லிங்காயத்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான அந்த கோயிலில் சுற்று வட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில், பூசாரி மட்டும் குண்டத்தில் இறங்கிய நிலையில், நந்தவன தோப்பிலிருந்து மேளதாளம் முழங்க ஆபரணங்கள் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
அந்த கோவிலில் பெண்கள் நுழைய தடை என்பதால் 2 கி.மீ தூரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட பெண்கள் ஊருக்கு வெளியே நின்றுகொண்டே வழிபட்டனர்.