கணினி முன் வேலை செய்பவாரா நீங்கள்? கட்டாயம் பார்க்க வேண்டியது.


உடல் உறுப்புகளில் முக்கியமானது கண்கள். கண்கள் இல்லையென்றால் எதையும் செய்ய இயலாது. கணினியில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் இருக்கும்.

இன்றைய இயந்திர உலகில் கண்களை  கவலையில்லாமல் 24 மணி நேரமும் கணினி முன் அமர்ந்து வேலை செய்கின்றனர்.

சிலருக்கு சத்துக் கோளாறு, வெப்பம், சுற்றுச்சுழல் போன்ற காரணிகளாலும் கண்கள் பாதிப்பு அடைகின்றன. இதனால் கண்களில் வலி, எரிச்சல் ஏற்பட்டு மிக அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கண் நோய்கள், தொற்றுகள் ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டியுள்ளது.

கண் பார்வை குறையாமல் எளிதில் சோர்வடையாமல் இருக்க இவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும்.

கணினி முன் வேலை செய்பவாரா நீங்கள்? கட்டாயம் பார்க்க வேண்டியது. | Do You Work In Front Of A Computer A Must See  

  • பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை மற்றும் வெந்தயக்கீரை சாப்பிட வேண்டும்.
  • உணவில் கேரட், பப்பாளிப் பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நல்லது.
  • இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் சுத்தமான நெய்யைத் தேய்த்து உறங்க வேண்டும்.
  • இரவில் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று துளி சுத்தமான நீர் விட்டு இமைகளை தேய்த்து நிலாவை பார்ப்பது நல்லது.

  • இரவு தூங்கும் முன் தினமும் திரிபலா சூரணம் ஒரு கிராம் சாப்பிட்டால் நல்லது.  
  • தூதுவளைக் காய் மற்றும் கீரையை சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும்.
  • சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
  • நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடியாக்கி பசும்பாலில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.  

  • தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவற்றை செய்து வந்தால் கண் வழியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.