Bala health update: நடிகர் பாலா கவலைக்கிடம்… மருத்துவமனையில் குவியும் பிரபலங்கள்!

கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் பாலாபிரபல இயக்குநரான சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா. 2 Much என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் பாலா. தமிழ் சினிமாவில் 2003 வெளியான ‘அன்பு’ என்ற படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து காதல் கிசு கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்தார் பாலா.
​ Rajinikanth, Jayalalitha: ரஜினியை எதிரியாக பார்த்தாரா ஜெயலலிதா? புட்டு புட்டு வைத்த பயில்வான்!​
சிறுத்தை சிவாவின் தம்பிபாலாவுக்கு மலையாள சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்த பாலாவுக்கு தமிழை காட்டிலும் மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாள படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார் பாலா. தமிழிலும் அவ்வப்போது நடித்து வரும் பாலா, தனது அண்ணனான இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் கெரண்டியாக நடித்து வருகிறார்.
​ Charmila: அவங்கெல்லாம் ஆண் விபச்சாரிகள்.. முன்னாள் காதலர்களை திட்டி தீர்த்த பிரபல நடிகை!​
வீரம், அண்ணாத்தஅந்த வகையில் அஜித்தின் வீரம், ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்துள்ளார் பாலா. இதேபோல் கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பங்கேற்று வந்தார் பாலா. நடிகர் பாலா பிரபல மலையாள பாடகியான அம்ருதா சுரேஷை கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
​ Tiktok Elakkiya: ஏன் இவ்ளோ பெருசா இருக்கு? டிக்டாக் இலக்கியாவிடம் பச்சையாக கேட்ட ஷகீலா!​
இரண்டாவது திருமணம்அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ள நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். இதையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டுதான் எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் பாலா. இந்நிலையில், நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
​ Vijayakanth: எனக்கே அடையாளம் தெரியல… விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறிய நடிகர்… திடீரென வைரலாகும் வீடியோ!​
ஐசியூவில் சிகிச்சைகொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலாவின் உடல்நிலை குறித்து அறிந்த இயக்குநர் சிறுத்தை சிவா, அவரை காண மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
​ Ajith: என் வீட்டு வாசல்லயே அஜித்தும் ஷாலினியும் காத்திருந்தாங்க… பிரபல தயாரிப்பாளர் உருக்கம்!​
குவியும் பிரபலங்கள் இதனிடையே நடிகர் பாலாவின் நண்பர்களான மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா விஷ்ணு மோகன், ஸ்வராஜ் மற்றும் விபின் உள்ளிட்டோர் நடிகர் பாலாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பே நடிகர் பாலா உடல் நலக்குறைவால் மருத்துவர்களை அணுகியுள்ளார். அப்போது கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகர் பாலா கவலைக்கிடமான நிலையில் ஐசியூவில் சிகிக்கை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Dhanush, Suriya: தனுஷ் கூட நடிக்கக் கூடாது… ஜோதிகாவுக்கு ஆர்டர் போட்ட சூர்யா!​
Bala Actor

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.