சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மசோதாவை ரத்து செய்த ஐகோர்ட், மீண்டும் கொண்டு வர தடை இல்லை என கூறியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர், நாங்கள் அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தி இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
