எரிசக்தி நிலையங்களை தாறுமாறாக தாக்கிய ரஷ்யா: ஏவுகணைகளால் சிதைந்த உக்ரைன்! பிரதமர் எச்சரிக்கை


ரஷ்யாவின் பயங்கரமான வான்வெளி தாக்குதலில் எட்டு பிராந்தியங்களில் எரிசக்தி வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அறிவித்துள்ளார்.


வான்வெளித் தாக்குதல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், கிழக்கு நகரமான பாக்முட்டில் கடுமையான சண்டை நிலவி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா இன்று உக்ரைன் முழுவதும் வான்வெளி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் நாட்டின் முக்கிய நகரங்களில் பெரிய அளவு பாதிப்பை சந்தித்து வருகின்றன.

எரிசக்தி நிலையங்களை தாறுமாறாக தாக்கிய ரஷ்யா: ஏவுகணைகளால் சிதைந்த உக்ரைன்! பிரதமர் எச்சரிக்கை | Energy Facilities Hit In Eight Regionssky news

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ,  ரஷ்யா இன்று  சரமாரியான ஏவுகணை தாக்குதலை எதிர் நோக்கி வருகிறது, அந்த வகையில் 10 பிராந்தியங்களில் மட்டும் 81 ராக்கெட் ஏவுகணைகள் ரஷ்யா ஏவியுள்ளது.


எரிசக்தி வசதிகள் பாதிப்பு

மேலும் ரஷ்யாவின் இந்த தாக்குதல் சிவிலியன் உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது என்பதை இப்போது பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பத்து பிராந்தியங்களில் எட்டு பகுதிகளில் எரிசக்தி மற்றும் விநியோக வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி நிலையங்களை தாறுமாறாக தாக்கிய ரஷ்யா: ஏவுகணைகளால் சிதைந்த உக்ரைன்! பிரதமர் எச்சரிக்கை | Energy Facilities Hit In Eight RegionsReuter

இதனால் சில பகுதிகளுக்கு மின் தடைகள் இன்னும் சாத்தியமாகும், ஆனால் நாட்டின் எரிசக்தி அமைப்பு “அப்படியே” உள்ளது என்று வலியுறுத்தினார்.

ஜபோரிஜியா அணுமின் நிலையம் உக்ரேனிய மின் அமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டதால் இன்று காலை அச்சம் ஏற்பட்டது, ஆனால் அது மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.