சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
