புலம்பெயர்வோருக்கு பிரித்தானியாவில் காத்திருக்கும் தண்டனை… அமைச்சர் வெளிப்படை


சிறுபடகுகளில் இனி பிரித்தானியா வந்து சேரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சிறைவாசம் காத்திருகிறது என உள்விவகார அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைந்தால்

ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை விளக்கும் போது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
சிறுபடகுகளில் இனி பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஜாமீன் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்றார்.

புலம்பெயர்வோருக்கு பிரித்தானியாவில் காத்திருக்கும் தண்டனை... அமைச்சர் வெளிப்படை | Suella Braverman Announces Lock Up Asylum Seekers

@getty

சட்டவிரோதமான இந்த சிறுபடகு பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழிகளை அரசாங்கம் அறிவிக்கும் என்றார் சுவெல்லா பிரேவர்மேன்.

ஆனால், ரிஷி சுனக் அரசாங்கத்தின் இந்த திட்டமானது கொடூரத்தின் உச்சம் எனவும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடுப்பது போன்றது எனவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

6 மில்லியன் பவுண்டுகள்

இதனிடையே, புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குவதற்கு என பிரித்தானிய அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தில் நாளுக்கு 6 மில்லியன் பவுண்டுகள் செலவிடுகிறது.

புலம்பெயர்வோருக்கு பிரித்தானியாவில் காத்திருக்கும் தண்டனை... அமைச்சர் வெளிப்படை | Suella Braverman Announces Lock Up Asylum Seekers

@AP

கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர்கள் ஏன் இதற்கான நிர்ந்தர தீர்வை இதுவரை கொண்டுவரவில்லை எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அரசாங்கம் வெற்று முழக்கத்தை மட்டுமே முன்வைக்கிறது ஒரு தீர்வை அவர்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.