#JUSTIN : அரசு பேருந்து குறித்த புகார்களுக்கு.. இனி ஒரு கால் செய்தால் போதும்.. அமைச்சர் அறிவிப்பு.! 

அரசு பேருந்துகளின் நிறை, குறைகள் குறித்த புகார்களை கட்டணம் இல்லாமல் பதிவு செய்ய புதிய இணையதளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பொதுவாக அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் மரியாதை குறைவாகவும், அதிலும் விலை இல்லா பயணம் செய்யும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் அநாகரிகமாகவும் நடந்து கொள்வது காலம் காலமாக அரங்கேறி வருகின்றது.

இது குறித்து பொதுமக்கள் பல்வேறு முறை அரசுக்கு கோரிக்கை வைத்த போதும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்றால் அது கேள்விக்குறி தான். இந்த நிலையில் இது போன்ற நிறை, குறைகள் பற்றி புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இணையதளம் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ” 18005991500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ, அல்லது www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலோ அரசு பேருந்துகள் குறித்த புகார்களை பொதுமக்கள் பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.