Nagma: அடக்கடவுளே… சூர்யா மச்சினிச்சி கிட்டேயே அந்த வேலைக்காட்டிய ஆள்…

காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நக்மா. இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த நக்மா முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். பின்னர் தனது அடுத்த படமாக நடிகர் ரஜினிகாந்தின் பாஷா படத்தில் நடித்தார். இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

ப்ச்… அந்த கொடுப்பனை இல்ல… பாவம்தான் தனுஷ்!

தொடர்ந்து சரத்குமார், சத்யராஜ், கார்த்தி என பிரபல நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் நக்மா. நக்மா தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பே பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தார். இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் டாப் நடிகையாக இருந்தார் நடிகை நக்மா. தமிழில் கடைசியாக சிட்டிசன் படத்தில் நடித்தார்.

தமிழ் தெலுங்கு இந்தி படங்களை தாண்டி கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, போஜ்புரி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மாவின் தங்கைகள்தான் நடிகை ரோஷினி மற்றும் ஜோதிகா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

Samantha, LR Eswari: பாட்டா அது… சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடலை கழுவி ஊற்றிய எல்ஆர் ஈஸ்வரி!

48 வயதான நடிகை நக்மா திருமணம் செய்து கொள்ளவில்லை. அரசியலில் தீவிரமாக உள்ள நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இந்நிலையில் ஆன் லைன் மோசடியில் ஒரு லட்சம் ரூபாயை நடிகை நக்மா இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்மாவின் செல்போனுக்கு சமீபத்தில் ஒரு மெஸேஜ் வந்துள்ளது. அதில், இருந்த ‘லிங்’கை நடிகை நக்மா ‘கிளிக்’ செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என கூறி பேசியிருக்கிறார்.

நக்மாவின் வங்கிக் கணக்கை புதுப்பிப்பதாக கூறி விவரங்களை கேட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 998 ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நடிகை நக்மா, தனது வங்கி விவரங்களை அளிக்காத போதும் தனது கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது, நல்ல வேளையாக பெரிய தொகையை தான் இழக்கவில்லை என கூறியுள்ளார்.

Pandian Stores Hema: அசப்பில் அப்படியே மீனா போல் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…

மும்பையில் இதுபோன்று சமீபத்தில் 80 பேர் பணத்தை இழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இது போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.