shubman gill: ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷா? கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் பளீச்!

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக இருப்பவர் சுப்மன் கில். 23 வயதான இவர் அதற்குள்ளேயே பல்வேறு காதனைகளை படைக்க தொடங்கி விட்டார். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து சுப்மன் கில்லிடம் அதுகுறித்து கேட்டு வந்தனர்.

Robert Master: வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி.. ராபர்ட் மாஸ்டரின் தங்கை அதிரடி கைது!

இதனை தொடர்ந்து சுப்மான் கில் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா பெயர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகி வந்தது. இந்த நிலையில், இந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சியடைந்த சுப்மன் கில், இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக வெளியான செய்திக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள சுப்மன் கில், இது எந்த ஊடகத்தில் பேசப்பட்டது? இதுகுறித்து எனக்கே எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை காதலிக்கிறார் என தகவல் பரவியது. அதன் பிறகு பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் பரவின. சுப்மன் கில் ஸ்டேடியத்தில் இறங்கினாலே சாரா சாரா என கத்தி வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் பெயர் சுப்மன் கில்லுடன் அடிபட்டு வருகிறது.

Dhanush: நான் நம்பின 3 பேரும் என்னை ஏமாத்திட்டாங்க… உருக்கமாக பேசிய தனுஷ்!

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களிலும் அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகா மந்தனா முன்னதாக கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். அவர்களின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது. இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Andrea: நிர்வாண கோலத்தில் ஆண்ட்ரியா… முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.