ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒரு புறம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், மறுபுறம் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் வரும் நாட்களில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு நாட்டின் எல்லையில் என்ன நடந்தாலும் சூழலைச் சமாளிக்கக் கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.