கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராகப்பிரியா. அரசுப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும இவருக்கும் சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுமானத் தம்பதிகளான இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர்.
அப்போது ராகப்பிரியாவிற்கு, கணவர் சுதர்சனுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது.
இது தொடர்பாக ராகப்பிரியா தனது கணவரிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் வீட்டில் சோதனை மேற்கொணடனர்.
அதில் ராகப்பிரியா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “தன் தற்கொலைக்கு தனது கணவர்தான் காரணம் என்று எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ராகப்பிரியா உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது.