சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்பு| Xi Jinping secures unprecedented third term as China’s president in ceremonial vote

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தொடர்ந்து 3வது முறையாக அந்நாட்டு பார்லிமென்டில் அதிபராக பதவியேற்றார்.

சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார். அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி அவரை ஒருமனதாக தேர்வு செய்தது. மேலும், மத்திய ராணுவ கமிஷன் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டின் பார்லிமென்டான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங்கை முறைப்படி அதிபராக தேர்வு செய்தது.

latest tamil news

இதையடுத்து, அவர் அந்நாட்டு பார்லிமென்டில் சீன அதிபராக உறுதிமொழி ஏற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மவோவுக்குப் பிறகு 2 முறைக்கு மேல் சீன அதிபராகி இருக்கும் முதல் நபர் ஜி ஜின்பிங். இவர் தனது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டின் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த அக்டோபரில் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் தேர்வாகி இருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.