ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட பா.ஜ அலுவலகம்: காணொலி காட்சி மூலம் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் அனைத்து நவீன வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜஅலுவலகத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மாநில நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் – பூந்தமல்லி சாலையில் வெங்கத்தூர் ஊராட்சியில் மாவட்ட பாஜ அலுவலகம் ரூ.3 கோடியில் அனைத்து வசதிகளுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் இடம் தேர்வு செய்து கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு 3 தளங்களுடன் கட்டடப்பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இதனை தொடர்ந்து பாஜ மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற குழு தலைவர் நாயனார் நாகேந்திரன் எம்எல்ஏ மாநில தலைவர் எம்.சக்கரவர்த்தி நாயுடு ஆகியோர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட பாஜ அலுவலகத்தை மாவட்டத் தலைவர் எம்.அஸ்வின் என்கிற ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் கோட்டப் பொறுப்பாளரும், மாநில செயலாளருமான வினோஜ் பி.செல்வம், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆனந்தபிரியா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மாநில நிர்வாகிகள் எம்.பாஸ்கர், ஜெ.லோகநாதன், ஏ.ராஜ்குமார், கீதாஞ்சலி சம்பத், முன்னாள் எம்எல்ஏ மு.அருண்சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
இதில் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் இரா.கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், கே.ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் பி.ஆர்.மதுசூதனன், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.ஞானவேல் என்ற முல்லை ஞானம், மாவட்ட செயலாளர்கள் பி.பன்னீர் செல்வம், த.பாலாஜி,  மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் எஸ்.டில்லிபாபு, டி.ஆர்.குமார், சுபாஷ், ரமேஷ், நகரத் தலைவர் சதீஷ்குமார், மண்டல தலைவர்கள் டாக்டர் ஆர்.சுரேஷ், கே.பழனி, கே.ரவிக்குமார், ஆர்.பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு 1000 பெண்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.ஞானவேல் என்ற முல்லை ஞானம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜி.ரஞ்சனி ஆகியோர் இலவச சேலைகளை வழங்கினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.