டெக்சாஸ்: அமெரிக்க பயணக் கப்பலில் பரவிய மர்மக் காய்ச்சலுக்கு, 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் – மெக்ஸிகோ இடையே, பிப்., 26 முதல் மார்ச் 5ம் தேதி வரை பயணித்த பிரின்ஸஸ் ரூபு என்ற கப்பலில், 2,881 பேர் பயணம் செய்தனர். அப்போது, கப்பலில் இருந்த பயணியருக்கு ஒருவர் பின் ஒருவராக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அனைத்து பயணியரும் கிருமி நாசினிகளை பயன்படுத்த துவங்கினர். அதில் இருந்த, 300க்கும் மேற்பட்ட பயணியர் மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட பயணியருக்கு, ‘ஸ்டூல் டெஸ்ட்’ எனப்படும் மலப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த காய்ச்சல் எப்படி பரவியது என்பது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்திலும் இந்தக் கப்பலில் பயணித்த பலருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது; கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு குணம் அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement