ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சி தலைவராக கருதுகிறார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநரை வைத்து ஒன்றிய பாஜக அரசு குடைச்சல் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட பிரதிநிதிகளை செயல்படவிடாமல் ஆளுநர்கள் தடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் இது போன்ற குழப்பங்கள் இல்லை என்பது எதிர்கட்சிகளின் வாதம்.
தமிழகத்தின் ஆளுநராக ஆர்என் ரவி பதவியேற்ற போது, தேர்ந்தடுக்கப்பட்ட திமுக அரசுக்கு எதிரான செயல்பட்டு வருவதாக திமுக கூட்டணி கட்சிகள் போர் கொடி தூக்கி வருகின்றன. நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட விவகாரங்களில் ஆளுநரில் செயல்பாடுகள் தமிழகத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதனால் தான் ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என திமுக எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர். அதேபோல் விசிகவின்
, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்தினர். ஆளுநர் செல்லும் இடமெல்லாம், அரசின் கொள்கைகளான சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட கருத்துகளுக்கு நேர் எதிரான சனாதன கருத்துகளை பரப்பி வருகிறார்.
பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக தன்னை ஆளுநர் வெளிப்படுத்திவருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஒரு நியமன அதிகாரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பது ஆளுநர் ரவி மறந்துவிடுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் வலுத்துவருகிறது. இந்தசூழலில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளார்.
ஆளுநரின் செயல்பாட்டிற்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும், அதை அவர் கண்டு கொள்வதாக இல்லை. இந்தநிலையில் ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி. தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கூறும்போது, ‘‘தமிழக ஆளுநர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். நீதிமன்றம் போல் அவர் செயல்படுகிறார்.
Daily Rasi Palan – 11.03.2023 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan | Samayam Tamil Lifestyle
தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால், சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான் முடிவை எடுக்கவேண்டும்.
ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல், அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்’’ என வீரமணி தெரிவித்தார்.