இது லிஸ்ட்லயே இல்ல.. அண்ணாமலையின் மனைவி வீடியோ திடீர் வைரல்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது குடும்பத்தின் மீது அரசியல் வெளிச்சம் படாமல் பார்த்து வருகிறார். இதுவரை அண்ணாமலை தனது மனைவி, குடும்பத்துடன் வெளியில் சென்றதாக நிகழ்வுகள்கூட மீடியாக்களில் வந்ததில்லை. ஆனால், சில நிகழ்ச்சிகளில் குடும்பத்தை குறித்து நெகிழ்ச்சியாக அவர் பேசி வருகிறார். அண்மையில்கூட, ” ஜெயலலிதாவைவிட என் மனைவி 1000 மடங்கு Power Full என்றும் எனது தாய் 500 மடங்கு Power Full என்றும் அண்ணாமலை பேசினார்.

பல பேருக்கு அண்ணாலையின் மனைவி அகிலாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் தற்போது தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவரது மனைவி அகிலா வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அப்போது அவர், இந்த தேர்தலில் அவர் கோயம்புத்தூர் அல்லது கிணத்துக்கடவில் நிற்பார் என்றுதான் இருந்தது.. பின்னர் தொகுதி பங்கீடு விஷயமாக அவர் சென்னைக்கு சென்று வந்தார். அதன் பிறகு அரவக்குறிச்சியில் போட்டியிடப்போவதாக சொன்னார்… பாஜகவுக்கு சொற்ப வாக்குகள் மட்டுமே கிடைக்கும் இந்த தொகுதியில் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று நான் கேட்டேன்.. அதற்கு அவர், அரசியல் என்கிறது மக்கள் பணி; நம்ம ஊரில் அதை செய்யாமல் எங்கு சென்று சாதித்தாலும் அதில் அர்த்தம் இருக்காது; என்னுடைய அரசியல் அரவக்குறிச்சியில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்றார்.

அதற்கு நான், ஒரு ஊரில் பிறந்ததால் அந்த ஊருக்கு தலைவன் ஆக வேண்டிய தகுதி எல்லாருக்கும் வந்துவிடுமா? உங்களுக்கு என்று தொலைநோக்கு பார்வை வேண்டாமா? அப்படி அரவக்குறிச்சிக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், அரவக்குறிச்சியில் நான்கு ஆறு ஓடுகிறது ஆனால் மூன்றில் இரண்டு பங்கு நிலத்தில் குடிநீர் கிடையாது..வருடம் முழுவதும் தண்ணீருக்கு கஷ்டப்படுகிறோம்… நான் வெற்றி பெற்றால் முதலில் அனைத்து வீடுகளுக்கும் பைப் கனெக்ஷன் மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும்” என அண்ணாமலை விரும்பியதாக அவரது மனைவி அகிலா வாக்கு சேகரிப்பின்போது தெரிவித்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்தனை நாட்கள் இல்லாமல் பழைய பிரச்சாரத்தின் வீடியோவை அரசியல் லாபத்திற்காக பாஜகவினர் வெளியிட்டுள்ளதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.