சுஷ்மிதா சென்: மாரடைப்புக்குப் பிறகு பேஷன் ஷோவில் அழகு நடைபோட்ட பிரபஞ்ச அழகி

இந்தியாவின் முன்னணி நடிகையான சுஷ்மிதா ஷென் பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பிரபல ஆடை வடிவமைப்பாளரான அனுஸ்ரீ ரெட்டிக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது வடிவமைப்பை காட்சிப்படுத்தினார். மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட சுஷ்மிதா சென், நீண்ட நாட்களுக்குப் பிறகு அதாவது மாரடைப்பு சிகிச்சைக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். சுஷ்மிதா சென் ரேம்வால்க் நடந்து வரும் வீடியோவை பேஷன் வீக் தங்களுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் அனுஸ்ரீ ரெட்டியின் வடிவமைத்த லேட்டஸ்ட் மாடல் துணிகளை அணிந்து கொண்டு, அழகு நடையுடன் அங்கு ரேம்பவால்க் போட்டார். 

அவரின் இந்த நடைக்கு ரசிகர்கள் வழக்கம்போல் வாழ்த்துகளையும், அன்பையும் சோஷியல் மீடியாவில் பொழிந்தனர். மாரடைப்பில் இருந்து சுஷ்மிதா சென்-ஐ காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி. இவ்வளவு அழகாக நடைபோடும் அவரை சீக்கிரமாக உடல்நலம்பெற வைத்த கடவுளுக்கு நன்றி, என் கனவுக்கன்னி மீண்டும் மேடையில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என்றெல்லாம் வசனமழையை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொழிந்து தள்ளினர். பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென் மார்ச் 2 ஆம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஆஞ்சியோபிளாஸ்டியும் சுஷ்மிதா சென் செய்து கொண்டார். 

மருத்துவர்களின் அறிவுரைகளின் பேரில் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருந்த சுஷ்மிதா சென், கடந்த வாரம் முதல் உடற்பயிற்சியை தொடங்கினார். இப்போது திடீரென தன்னுடைய பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவரின் கம்பேக் சுஷ்மிதா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சுஷ்மிதா சென் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ஆர்யா என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் தாலி என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படப்பிடிப்புகளில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதையும் சுஷ்மிதா சென் உறுதிபடுத்தியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.