தங்க நகை வாங்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா ?



உலோகங்களில் மிக உயர்ந்த உலோகமாக தங்கம் கருதப்படுகிறது.பூமியின் அடியிலே இருந்து எடுக்கப்படும் பெறுமதி மிக்க உலோகம் தங்கமாகும்.

இயற்கையாகவே தங்கத்திற்கு மதிப்பு அதிகம்.ஆகையால் தங்கம் வாங்கும்போது நாம் கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு சில விடயங்களை பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே தங்க நகை, வெள்ளி நகைகளை எந்த நாளில் வாங்கலாம்? சுப நேரத்தில் மட்டும்தான் வாங்கலாமா?என்று பல கேள்விகள் இருக்கும்.

முதலாவதாகவே நாம் அனைவருமே தங்கம் வாங்கிய உடனேயே அதை அணிந்து கொள்ளுவோம்,அது தவறு.முதலில் அதற்கு மஞ்சள் நீர் தெளித்து,உங்கள் இஷ்டமான தெய்வத்திற்கு வைத்து பின் அணிவதே சிறந்தது.

எந்த நாளில் வாங்கலாம்?

வியாழக்கிழமைகளில் தங்கம் வாங்குதல் சிறந்தது.

வியாழக்கிழமையை தங்கம் சேர்க்கும் வியாழன் எனவும் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை அன்று தான் லட்சுமி தேவி பிறந்ததாக கூறப்படுகிறது ஆகையால் வியாழக்கிழமை வாங்கலாம்.

எந்த விரலில் தங்கம் அணியலாம் ?

  • நேர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி தங்கத்திற்கு இருக்கிறது.
  • ஆகையால் நேர்மறை அதிர்வுகளை கொண்டிருக்கும் கோவில்களுக்கு, தங்க நகை அணிந்து செல்ல வேண்டுமாம்.

  • ஆட்காட்டி விரலில் அணிவதால் மனம் ஒருநிலை படுத்த உதவும்.

  • சிறுவர்களுக்கு மோதிர விரலில் அணிவிப்பது சிறந்தது.

    சளி ,குளிர் மற்றும் சுவாச நோய்கள் இருந்தால்,தங்க மோதிரத்தை சுண்டு விரலில் அணியலாம்.

எந்த ராசிகாரக்ளுக்கு தங்கம் சிறந்தது?

  • ரிஷபம் மிதுனம் கும்பம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது அவ்வளவு நல்லதில்லை எனவும் கூறுகின்றனர்.
  • மேஷம்,கடகம்,சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கம் சிறந்த ஒரு உலோகம்.

  • மற்றைய ராசிகாரக்ளுக்கு இது சுமாரான ஒரு பலனையே அளிக்குமாம்.

தங்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

  • உடலின் வெப்பத்தை சீராக பேணவும்,நோய்எதிர்ப்புக்கு தூண்டுகோலாகவும் இருக்கிறது.

  • இரத்தோட்டம் சீராக இயங்க உதவுகிறது.

  • நேர்மறை அதிர்வுகள் மற்றும் நேர்மறை அலைகளை நமக்குள் ஏற்படுத்துகிறது.

       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.