பதவியை காப்பாற்ற நெருக்கமானவர்களை கொன்று தள்ளும் புடின்: இதுவரை 39 பேர்கள்!


தனது எதிரிகளை தோற்கடிக்கவும் ஆதரவாளர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் படுகொலைகளை ஆயுதமாக பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.

புடினின் பதவி வெறி

அந்த வகையில், இதுவரை 39 உயர் அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களின் மரணத்திற்கு பின்னால், புடினின் பதவி வெறி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் டசின் கணக்கான உயர் அதிகாரிகள் திடீரென்று மரணமடைந்துள்ளனர்.

பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதும், மாரடைப்பால் பலியானதும் என மரண காரணங்கள் மர்மமாகவே உள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு தமது அமெரிக்க வீட்டை விற்ற ரஷ்ய செல்வந்தர், இந்த வாரம் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

பதவியை காப்பாற்ற நெருக்கமானவர்களை கொன்று தள்ளும் புடின்: இதுவரை 39 பேர்கள்! | Putin Killing Russian Elite To Cling To Power

கடந்த வாரம் Sputnik V கொரோனா தடுப்பூசி உருவாக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர்கள் இருவரது இறப்பும், விளாடிமிர் புடினின் பதவி வெறிக்கு இரையானதாகவே பார்க்கப்படுகிறது.

சுமார் 1,000 படுகொலைகள்

FSB அமைப்பானது Murder Inc என்ற குழுவை உருவாக்கி 1930 காலகட்டத்தில் சுமார் 1,000 படுகொலைகளை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. 
தற்போதும் அதே பாணியை விளாடிமிர் புடின் தமது எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த 39 பேர்கள் கொண்ட பட்டியலில் பெரும்பாலானவர்கள் சன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டதும், மர்மமான முறையில் குடியிருப்பில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் புடின் மீது விமர்சனம் முன்வைத்துள்ளவர்கள் இந்த 39 பேர்களும் என்றே கூறுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.