சென்னை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும் எனவும் திங்கட்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சென்னையில் நாளை அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை திங்கட்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்.
அதேபோன்று வரும் மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ள மேல்நிலை பொது தேர்வுக்கான அனைத்து தேர்வு மையங்கள் தயார்படுத்தும் பணிகளும் முழுமையாக மேற்கொண்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.