கோவை: முதலமைச்சர் பதவிக்காக கட்சிதொடங்கிய பல கட்சிகள் இன்று காணாமல் போயின என கோவையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் 10ஆயிரம் பேர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை சென்றார். முற்பகல் மாற்றுகட்சியினர் திமுகவில் சேரும் விழாவும், பிற்பகலில், பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. இன்று காலை கோவை சின்னியம்பாளையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட திமுக […]
